அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை விரைவில் அமல்
அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் போல், அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை விரைவில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசு அலுவல கங்களில் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் இதற்கு எதிர்ப்பு வந்தா லும் பின்னர் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், தலைமைச் செயலகம் மற்றும் இதர துறைகளின் தலைமை அலுவலகங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதேநேரம், பொதுத்துறை நிறு வனங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை அறிமுகப் படுத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் தலை மைச் செயலகம் உள்ளிட்ட அனைத் துத் துறை அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான மென்பொருள் உரு வாக்கப்பட்டு பணிகள் நடந்தன.
ஆனால் முழுமையாக அமல் படுத்தப்படவில்லை. அதேநேரம், பதிவுத்துறை தலைவர் அலுவலகம், டிஎம்எஸ் உள்ளிட்ட சில முக்கிய துறை அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலை யில், தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகைப் பதிவேடு தற்போது கட்டாயமாக் கப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாதம் முதல் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, அரசு ஊழியர் கள், ஆசிரியர்கள் வருகைப் பதி வேடு, ஊதியம் சர்வீஸ் ஃபைல், ஓய்வு விவரம் உள்ளிட்ட சேவை கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக் கும் பணிகள் முழுவீச்சில் தற் போது நடந்து வருகின்றன. இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடை முறைபடுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வருகைப்பதிவேடு, விடுமுறை உள்ளிட்டவற்றையும் ஒருங்கி ணைக்க, பயோமெட்ரிக் முறையை அனைத்து அலுவலகங்களிலும் அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் வரவு - செலவு மற்றும் அரசு ஊழியர்களின் பணி விவரம் உள்ளிட்ட அனைத்தையும் ஒரே நேரத்தில் அறியும் வகையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் டிஜிட்டல் கையொப்பம், பயோமெட்ரிக் மூலம் வருகைப் பதிவை உறுதி செய்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கட்டாய மாக்கப்படுகிறது. இதில் பயோமெட் ரிக் வருகைப்பதிவு ஆசிரியர்களைப் போல் அரசு அலுவலகங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. துறை கள்வாரியாக இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் நடைமுறைப்படுத்துவது சிரமம் என்பதால் படிப்படியாக கொண்டு வரப்படும்.

Reviewed by Rajarajan
on
6.5.19
Rating:
கருத்துகள் இல்லை