பள்ளி திறக்கும் அன்று புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் - கல்வித்துறை
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மாணவர்களுக்கான பாடநூல்களை அச்சடித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் வழங்கி வருகிறது.
1 முதல் 12 ஆம் வகுப்பிற்கான பாடநூல்கள் தமிழ் மற்றும் ஆங்கில வழியிலும் அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. அதுபோல, 1 முதல் 12 ஆம் வகுப்பிற்கான சிறுபான்மை மொழிப் பாடநூல்கள் (தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் உருது). அச்சடிக்கப்படுகிறது.இந்த நிலையில், தற்போது, பாடநூல்கள் அச்சசடிக்கும் பணி முடிவடைந்து, பள்ளிகளுக்கு அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக தமிழக பாடநூல் கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.இந்த நிலையில், ஜூன் 3ந்தேதி பள்ளி திறக்கும் அன்று மாணவ மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
பள்ளி திறக்கும் அன்று புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் - கல்வித்துறை
Reviewed by Rajarajan
on
8.5.19
Rating:
Reviewed by Rajarajan
on
8.5.19
Rating:


கருத்துகள் இல்லை