மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளில் சேர்வதற்கு வசதியாக இ - சேவை நேரம் அதிகரிப்பு தமிழக அரசு
பள்ளி, கல்லுாரிகளில் சேர, மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனடியாக கிடைக்க, அரசு, &'இ - சேவை&' மைய ஊழியர்கள், கூடுதல் நேரம் பணியாற்றும்படி, அரசு கேபிள், &'டிவி&' நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பெற, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், &'டிவி&' வழியாக, அரசு, இ - சேவை மையத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த சேவை மையத்தில், பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், வண்ண வாக்காளர் அட்டை அச்சிடுதல் உட்பட, 80க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், மாணவர்களின் வசதிக்காக, இ - சேவை மையங்களை கூடுதல் நேரம் திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாணவர்களின் வசதிக்காக, இ - சேவை மையங்களை கூடுதல் நேரம் திறந்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு, இ - சேவை மைய அதிகாரிகள் கூறியதாவது: மே, ஜூன் மாதங்கள் மாணவர்களுக்கானவை. பள்ளி படிப்பை முடித்து, கல்லுாரியில் சேர பல சான்றிதழ்கள் தேவைப்படும். இந்த நேரத்தில், சேவை கிடைக்காமல் மாணவர்கள் திணறக்கூடாது என்பதால், இ - சேவை மையங்களை, கூடுதல் நேரம் திறந்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேவை மையங்கள் வழக்கமாக, காலை, 10:00 முதல், மாலை, 5:45 மணி வரை செயல்படும். ஜூன் வரை, காலை, 9:30க்கு திறந்து, மாலை, 6:30 மணி வரை செயல்பட, ஊழியர்களை அறிவுறுத்தி உள்ளோம். இந்த நேரங்களில், மாணவர்கள் உட்பட அனைவரும், இ - சேவை மையங்களை பயன்படுத்தி, தங்கள் சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளில் சேர்வதற்கு வசதியாக இ - சேவை நேரம் அதிகரிப்பு தமிழக அரசு
Reviewed by Rajarajan
on
17.5.19
Rating:
கருத்துகள் இல்லை