அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகை பதிவேடு வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும். ஆதார் எண்ணை அடிப்படையாக கொண்டு செயல்படும் வருகைப்பதிவேடு முறை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான ஊதியம் அரசின் நிதியில் இதிலிருந்தே வழங்கப்படுகிறது.
நிதியுதவி பள்ளிகளில் சில ஆசிரியர்கள், பாடம் எடுக்கும் பணிகளை விட, பள்ளி நிர்வாக பணிகளுக்கே, அவர்கள் முக்கியத்துவம் தருவதால், மாணவர்கள் பாதிப்பதாக புகார்கள் உள்ளன. எனவே அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர்களை பயோமெட்ரிக் மூலம் கண்காணிக்க முடிவு செய்துள்ளது
. .
. .
ஆசிரியர்கள், தினமும் பள்ளிக்கு வரும் போதும், பள்ளியை விட்டு செல்லும் போதும், வருகை பதிவில் தங்கள் விரல் பதிவுகளை வைக்க வேண்டும். இடையில் அலுவலக பணி காரணமாக வெளியே சென்றாலும், அதற்கும், பயோ மெட்ரிக் பதிவு செய்ய, நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பள்ளிகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு
Reviewed by Rajarajan
on
13.5.19
Rating:
கருத்துகள் இல்லை