Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

அரசு பள்ளிகளை வண்ணமயமாக்கும் பட்டாம்பூச்சிகள் அமைப்பு, "அரசுப்பள்ளியை நோக்கி மாணவர்களை வரவைப்பதை எங்களின் நோக்கம் "


சேலம், திருப்பூர், தேனி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த 12க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தாங்களாகவே பட்டாம்பூச்சிகள் எனும் அமைப்பை தொடங்கி தமிழகத்தில் நலிந்த நிலையில் உள்ள அரசுப்பள்ளிகளை கையிலெடுத்து பள்ளிக்கு வண்ணமடித்தல்,பள்ளியில் சுவர்களில் பள்ளிமாணவர்களை எளிதிலும்,உளவியல் ரீதியாகவும் ஈர்க்கும் வண்ணம்,தமிழகத்தின் அடையாளமாக இருக்கும் ஓவியங்கள் வரைவது, சமூக சிந்தனை கருத்துக்களை ஓவியத்தில் வடிப்பது,பள்ளியில் மரக்கன்றுகள் நடுவது,பள்ளியின் கட்டமைப்பை சீர்செய்வது என பல்வேறு பணிகளை தங்களது சொந்த பணத்தின் மூலமும், மற்றும் அரசுப்பள்ளிக்கு தாமாக உதவ முன்வரும் நன்கொடையாளர்களிடமும் பெற்று அரசுப்பள்ளிகளை அழகான பள்ளிகளாக மாற்றி வருகிறார்கள். 



இதுபோன்றுதான் புவனகிரி அருகே உள்ள கும்மூடிமூலை அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளியின் தோற்றத்தையே அழகாக மாற்றி வருகிறார்கள்.இப்பள்ளியின் சுவற்றில் தமிழர்களின் வீரவிளையாட்டைச்சொல்லும் ஜல்லிக்கட்டு காளை வீரர் காளையை அடக்குவதுபோன்ற படம், இயற்கையை காப்போம், ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் படம்,கலைகளின் மதிப்பை உணர்த்தும் பரதநாட்டியம் என மாணவர்கள் பார்த்தவுடன் புரிந்துக்கொள்ளக்கூடிய நல் சிந்தனை, அறிவியல் கருத்துக்களை உருவாக்கும் ஓவியங்களை வரைந்துள்ளனர். இதனால் கும்மூடிமூலை அரசுநடுநிலைப்பள்ளியானது கிராமத்தில் மிளிரும் உலகத்தரம் வாய்ந்த பள்ளியாக மாறியுள்ளது.

தற்போது இங்கு நடக்கும் பணிகளுக்கான நிதியுதவியை ஜப்பான் வாழ் தமிழர்களின் முழுமதி அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார்கள்.இது குறித்து கூறும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது நாங்கள் இவ்வாறு செய்வதின் நோக்கமே அரசுப்பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது, மற்ற பள்ளிகளுக்கு எவ்விதத்திலும் குறைவில்லாமல் எப்போதும் சிறந்தது அரசுப்பள்ளி என்பதை மாணவர்கள் பெற்றோர்கள் மனதில் ஆழமாக பதிய வைப்பதுதான்.இதுவரை நூற்றுக்குமேற்பட்ட பள்ளிகளை இதுபோல் பல்வேறு ஓவியங்களை தீட்டி அழகுமிளிரும் அரசுப்பள்ளியாக மாற்றியிருக்கிறோம்.நாங்கள் இப்போது செய்து வரும் அனைத்து பணிகளையும் அரசுடன்,அரசு அதிகாரிகளுடன் இணைந்துதான் செய்து வருகிறோம். 
அரசு பள்ளிகளை வண்ணமயமாக்கும் பட்டாம்பூச்சிகள் அமைப்பு, "அரசுப்பள்ளியை நோக்கி மாணவர்களை வரவைப்பதை எங்களின் நோக்கம் " அரசு பள்ளிகளை வண்ணமயமாக்கும் பட்டாம்பூச்சிகள் அமைப்பு, "அரசுப்பள்ளியை நோக்கி மாணவர்களை வரவைப்பதை எங்களின் நோக்கம் " Reviewed by Rajarajan on 13.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை