வடகர்நாடகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத மறுவாய்ப்பு
கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத மறுவாய்ப்பு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்.
கர்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட 8 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர்.ஆனால் ஹம்பி விரைவு ரயிலில் தாமதமாக வந்ததினால், வடகர்நாடகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் நண்பகல் 2.37 மணிக்கு வந்து சேர்த்தனர். புறநகர்ப் பகுதிகளில் அமைந்திருந்த தேர்வு மையங்களுக்குச் செல்லமுடியாமல் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியாமல் தவித்தனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மாநில அரசியல் தலைவர்கள் கர்நாடக மாணவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற என்ற கோரிக்கையை வைத்தனர். இந்நிலையில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அவர்கள் கோரிக்கையை ஏற்பதாக அறிவித்துள்ளார்.
வடகர்நாடகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுத மறுவாய்ப்பு
Reviewed by Rajarajan
on
7.5.19
Rating:
கருத்துகள் இல்லை