திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் கம்பியூட்டர் ஆப்ரேட்டர் பணி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் புதியதாக உருவாகியுள்ள 45 கம்பியூட்டர் ஆப்ரேட்டர் (தற்காலிக பணி) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 45
பணி: Computer Operator
தகுதி: Computer Science, Computer Application போன்ற பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று கம்பியூட்டர் அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள்
சம்பளம்: மாதம் ரூ. 20,600 - 65,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
https://districts.ecourts.gov.in/tirunelveli என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்டு தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி - 627 002
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.05.2019
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் கம்பியூட்டர் ஆப்ரேட்டர் பணி
Reviewed by Rajarajan
on
9.5.19
Rating:

கருத்துகள் இல்லை