Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பொறியியல் பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் இன்று முதல் - DOTE TNEA 2019

tamil nadu engineering admission 2019

தமிழ்நாடு பொறியியல் பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு  ( DOTE TNEA 2019 )விண்ணப்பங்கள் இன்று முதல் ஆன்லைன் வழியாக துவங்க இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு அரசு உதவிபெறும் அண்ணா அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 2019 20 ஆம் ஆண்டிற்கான பொறியியல் பட்டப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் துவங்குகிறது ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் மே 31. 

ரேண்டம் எண்  ஜூன் 03 தேதி வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் ஜூன் 17ம் தேதியும்,  கவுன்சிலிங் (Vocational)  ஜூன்  25 ம் தேதியும் நேரிலும்,  பொது பிரிவிற்கான (Academic) ஆன்லைனில் கவுன்சிலிங் ஜூலை  03 தேதி துவங்குகிறது.

ஒட்டுமொத்த கலந்தாய்வு 30 ஜூலை முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் (TNEA) சென்னையில் மட்டும் நடைபெறும்.


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் முறையே  விண்ணப்பதாரரின் பெயர், இமெயில் ஐடி, தொலைபேசி எண், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான வேண்டுதல், பதிவுக்கட்டணம், ஆதார் விவரங்கள்,பெற்றோர் ஆண்டு வருமானம், பள்ளி விவரங்கள், 12 ஆம் வகுப்பு தேர்வு எண், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்றவை


மேலும், இது குறித்த முழு தகவல்களை பெற, www.tneaonline.in - என்ற இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம்.


வங்கிகள் மூலம் பதிவுக்கட்டணம் செலுத்துவோர் நினைவில் வைக்க வேண்டியவை:
'The Secretary, TNEA' Payable at Chennai, என்ற பெயரில் 01.05.2019 -க்கு பிறகு பெற்ற வரைவோலை மூலமாக பதிவுக்கட்டணத்தை தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFCs) வாயிலாக சமர்ப்பிக்கலாம்

ஆன்லைனில், www.tneaonline.in என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

பொறியியல் பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் இன்று முதல் - DOTE TNEA 2019 பொறியியல் பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு விண்ணப்பங்கள் இன்று முதல் - DOTE TNEA 2019 Reviewed by Rajarajan on 2.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை