நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது...தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள NEET தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள்
நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் தேர்வர்களுக்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
NEET தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள்
1. நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
2. தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையங்கள் திறக்கப்படும். 3. மதியம் 1.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை.
4. ஒவ்வொருவருக்கும் ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டு அதில் அவர்களின் தேர்வு பதிவு எண் ஒட்டப்பட்டு இருக்கும் 1.30 மணி முதல் 1.45 மணி வரை தேர்வு குறித்த முக்கிய நடைமுறைகள் அறிவித்தல் மற்றும் 'ஹால் டிக்கெட்' பரிசீலனை நடைபெறும்.
5. 'ஹால் டிக்கெட்' இல்லாதவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்கள்.
6. 1.45 மணிக்கு விடைத்தாள் தொகுப்பு தரப்படும்.
7. 1.50 மணி முதல் 2 மணி வரை தங்களைப் பற்றிய தகவல்களை விடைத்தாள் தொகுப்பில் பதிவு செய்ய வேண்டும்.
8. விடைத்தாளில் 2 மணி முதல் 5 மணி வரை விடைகளை எழுத வேண்டும்.
9. 5 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வு அறையைவிட்டு வெளியேறக்கூடாது.
10. ஆள் மாறாட்டத்தை தடுக்க வருகை பதிவுத் தாளில் மாணவர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.
11. தேர்வு எழுத பால் பாயிண்ட் பேனா ஒன்று தேர்வு மையத்தில் வழங்கப்படும்.
12. ஜியோ மெட்ரிக்பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் உள்ளிட்ட எதற்கும் அனுமதி இல்லை. மொபைல் போன், புளூடூத், பென்டிரைவ், கை கடிகாரம், கை கேமரா, காதணிகள், வளையல் போன்ற ஆபரணங்களுக்கு அனுமதி இல்லை.
13. மென்மையான நிறத்தில் ஆடை இருக்க வேண்டும்.
14. அரைக்கை சட்டைக்கு அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அணியக்கூடாது.
15. மத சார்பான அதிகம் உடல் மறைக்கும் ஆடைகள் அணிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு அறைக்கு வந்து ஆசிரியைகளின் சோதனைக்கு உட்பட வேண்டும்.
16. தேர்வு மையத்துக்குள் ஷு அணியக்கூடாது.
17. செருப்பு மட்டும் அனுமதிக்கப்படும். அதுவும் ஹைஹீல்ஸ் உள்ளதாக இருக்கக்கூடாது.
என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது...தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள NEET தேர்வர்களுக்கான கட்டுப்பாடுகள்
Reviewed by Rajarajan
on
4.5.19
Rating:
கருத்துகள் இல்லை