கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம் - பள்ளி கல்வித்துறை
பள்ளிகளில் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், இதுவரை 60 ஆயிரம் பேர் விண்ணப்பத்திருப்பதாகவும், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் மே 18-ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது. அதிக விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் சேர்க்கை உறுதி செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோர், தங்கள் இருப்பிடத்துக்கு அருகேயுள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் எனவும், சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை சேர்க்க மறுக்கும் பள்ளிகள் குறித்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்தில் புகார் அளிக்கலாம் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம் - பள்ளி கல்வித்துறை
Reviewed by Rajarajan
on
5.5.19
Rating:
கருத்துகள் இல்லை