மத்திய அரசு பணி - ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) - பத்தாயிரம் காலி பணியிடங்கள் வரைவில் விண்ணப்பியுங்கள்...!
மத்திய பணியாளர் தேர்வாணையம் எனப்படும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC), மத்திய அரசுத்துறையில் தற்போது காலியாக இருக்கும் மல்டி டாஸ்க்கிங் பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
இது தொடர்பான பின்வரும் விவரங்களை வெளியிட்டுள்ளது எஸ்எஸ்சி:
பதவியின் பெயர்: மல்டி டாஸ்க்கிங் (non-technical)
காலியிடங்கள்: 10,000
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.5,200 முதல் ரூ.20,200
பணி இடம்: இந்தியா முழுவதும்
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29 மே 2019
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிவர்களுக்கு பார்ட் 1, பார்ட் 2 என இரு பாகங்களாக விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பார்ட்டில் பதிவு செய்யும் கேண்டிடேட்டின் சொந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும் விண்ணப்ப தாரரின் பெயர், விலாசம், படிப்பு, தொலைபேசி எண் மற்றும் அரசாங்க அடையாள அட்டைகளான ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
பார்ட் 2வில் விண்ணப்பதாரர் இந்த ஆன்லைன் இணைய சேவை மூலம் தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நெட்பேங்கிங் அல்லது ஏடிம் கார்டுகளின் மூலமாக பதிவு தொகையை செலுத்த வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் கையெழுத்தையும் புகைப்படம் வாயிலாக அதில் இனைக்க வேண்டும்
இந்த வேலைக்கான விண்ணப்ப பதிவு நிறைவு செய்யப்பட்ட பின் ஜூலை மூன்றாவது வாரத்தில் பதிவு செய்தவர்களுக்கு ஒரு அட்மிட் கார்ட் வழங்கப்படும். பின்னர் ஆகஸ்ட் 2முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை விண்ணப்பித்தவைகளுக்கான நுழைவுத் தேர்வு நடக்கவுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
முதல் கட்டம் - கணினி சார்ந்த எழுத்துத் தேர்வு
2ஆம் கட்டம் - நவம்பர் மாதம் 17ஆம் தேதி ஆவண சரிபார்ப்பு
3ஆம் கட்டம் -SSC குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவார்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க https:// ssc.nic.in என்ற தளத்தினை பயன்படுத்தவும்..
மத்திய அரசு பணி - ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (SSC) - பத்தாயிரம் காலி பணியிடங்கள் வரைவில் விண்ணப்பியுங்கள்...!
Reviewed by Rajarajan
on
5.5.19
Rating:
கருத்துகள் இல்லை