நான்கு ஆண்டு ஒருங்கிணைத்த ஆசிரியர் பட்ட படிப்பு( UG Education ) அறிமுகம் - மத்திய அரசு
நேரடியாக ஆசிரியர் பணிக்கு செல்லும் வகையில் ஒருங்கிணைந்த 4 அண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்பு(பி.எட்) அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிளஸ்2 தேர்வுக்கு பின், இளநிலை பட்டம் பெற்ற பிறகு பி.எட் படிக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது ஒருங்கிணைந்த நான்காண்டு ஆசிரியர் படிப்புக்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பிற நாட்டு ஆசிரியர் கல்வி நடைமுறைகளோடு ஓப்பிடப்பட்டு இந்த 4 அண்டு படிப்பு அறிமுகப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
நான்கு அண்டு ஆசிரியர் படிப்பில் கணிதம், அறிவியல், சமூகஅறிவியல், மானுடவியல், ஆசிரியர் பணி சார்ந்த பிற படிப்புகளில் உள்ள பாடங்கள் இடம்பெறும். இதன் மூலம் ஆசிரியர் பணிக்கு தகுதிவாய்ந்த நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் இந்த ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்விபடி.ப்பைநடத்தலாம்.இந்த படிப்புக்கான வழிமுறைகளை பின்பற்றி, கட்டமைப்புகளை உருவாக்கி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு இந்த படிப்பை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும். இவ்வாறு மத்திய அரசின் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டு ஒருங்கிணைத்த ஆசிரியர் பட்ட படிப்பு( UG Education ) அறிமுகம் - மத்திய அரசு
Reviewed by Rajarajan
on
20.5.19
Rating:
Reviewed by Rajarajan
on
20.5.19
Rating:


கருத்துகள் இல்லை