Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

டயல் 14417 ஹலோ " பள்ளி கல்வித்துறை " - மாணவர்களுக்கு வழிகாட்டும் ஹெல்ப் லைன்



தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில் ஒன்று மாணவர்களுக்கான ஹெல்ப்லைன் நம்பர.  இந்த கட்டணமில்லா தொலைபேசி 14417 எண்ணில் போன் செய்தால் வணக்கம் பள்ளிக்கல்வித்துறை என்று ஒருவர் பேசுகிறார். அவர் மாணவர்களுக்கு தேவைப்படும் அனைத்து தகவல்களையும் வழங்கி வருகிறார்கள்.   இந்த சேவையானது கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வகையிலும் உயர்கல்வி செல்வதற்கான வழிமுறைகளையும் இந்த ஹெல்ப்லைன் ஆனது வழிகாட்டும்.  இந்த கட்டணமில்லா தொலைபேசி

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் 24 மணி நேரமும் ஆலோசனை பெற்றுக்கொள்ள முடியும்.  மேலும் பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக் கல்வி ஊழியர்கள் இலவசமாக தொடர்பு கொள்ளலாம்.பொதுமக்களுக்குத் தேவையான கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களும் கனிவாக வழங்குகிறார்கள்.

கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்கள்  வழங்குவதோடு  கல்வி  கடன், தேர்வு கட்டண விவரங்கள், பாட சந்தேகம், பள்ளிகளின் கட்டமைப்பு, நல திட்டம், மன அழுத்தம்,  உளவியல் ஆலோசனைகள் கல்வி உதவித்தொகை விபரங்கள் குறித்த தகவல்களையும் இங்கு பணிபுரிபவர்கள் மிக அருமையாக வழங்கி வருகிறார்கள். இந்த ஹெல்ப்லைனை  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்  பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. 

டயல் 14417 ஹலோ " பள்ளி கல்வித்துறை " - மாணவர்களுக்கு வழிகாட்டும் ஹெல்ப் லைன் டயல்  14417  ஹலோ " பள்ளி கல்வித்துறை " - மாணவர்களுக்கு வழிகாட்டும் ஹெல்ப் லைன் Reviewed by Rajarajan on 3.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை