இதுவரை பொறியியல் படிப்பிற்கான ஆன்-லைன் விண்ணப்பம் 87 ஆயிரத்தை தாண்டியது...
பொறியியல் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டுக்கான பி.இ. மாணவர் சேர்க்கைன ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு, மே 2-ஆம் தேதி தொடங்கியது. 11 நாள்கள் கடந்து முடித்த நிலையில் 87,033 விண்ணப்பித்துள்ளனர். இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை தமிழ் நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கம் நடத்த உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கான பி.இ. மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. ஜூன் 3-ஆம் தேதி சமவாய்ப்பு எண்ணும், ஜூன் 6 முதல் 11 வரை கலந்தாய்வு மையங்களில் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். ஜூன் 17 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
ஜூன் 20-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும், ஜூன் 21-இல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், ஜூன் 22-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்குமான கலந்தாய்வு நடைபெறும். பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை கலந்தாய்வு நடைபெறும். பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 28-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.
இதுவரை பொறியியல் படிப்பிற்கான ஆன்-லைன் விண்ணப்பம் 87 ஆயிரத்தை தாண்டியது...
Reviewed by Rajarajan
on
13.5.19
Rating:
கருத்துகள் இல்லை