மூன்று நாள் தாமதமாக வந்தால் ஆப்சென்ட் - பயோமெட்ரிக் வருகை பதிவு - பள்ளிக்கல்வித்துறை
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு முறை ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படுகிறது. மாதத்தில் 3 நாள் தாமதமாக வந்தால் ஆப்சென்ட் போடப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதற்கு சமூக, பொருளாதார சூழ்நிலை ஒரு தடை கல் என்றால், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு முழுமையாக இல்லாததும் ஒரு காரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முதற்கட்டமாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறையை வரும் கல்வியாண்டில் அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ஜூன் முதல் முறை அமல்படுத்தப்படுகிறது. இதை முன்னிட்டு பயோ மெட்ரிக் இயந்திரத்தை கையாளும் முறை, அதில் வருகையை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் தலா 2 பயோ மெட்ரிக் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களின் நேரம் முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்தே கண்காணிக்கப்படும். தினசரி காலை 10 மணிக்கு எந்தெந்த பள்ளிகளில் ஆசிரியர்கள் தாமதமாக வந்துள்ளனர். வராதவர்கள் முறைப்படி விடுமுறை அனுமதி பெற்றுள்ளார்களா போன்ற விவரங்கள் கண்காணிக்கப்படும். மாதத்தில் 3 நாட்களுக்கு மேல் தாமதமாக வந்தால் ஆப்சென்ட் போடப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் தாமதமாக வந்தால் ஆப்சென்ட் - பயோமெட்ரிக் வருகை பதிவு - பள்ளிக்கல்வித்துறை
Reviewed by Rajarajan
on
10.5.19
Rating:
கருத்துகள் இல்லை