Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

பயோமெட்ரிக் விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும் - பள்ளி கல்வித்துறை செயலர்

பயோமெட்ரிக் முறை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அமல்படுத்தப்படும். விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும்.

பள்ளி கல்வித்துறை செயலர் மற்றும் இயக்குனர்கள் கலந்து கொண்ட வீடியோ கான்பரன்ஸ் கூட்டத்தில் வரும் கல்வி ஆண்டில் பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய செயல் குறித்து விவாதிக்கபட்டது. அதில்.....  

EMIS ஆன்லைனில் அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .அதை வைத்து தான்  அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும் .எனவே, EMIS-ல் அனைத்து தகவல்களையும் கவனமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.பயோமெட்ரிக் முறை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அமல்படுத்தப்படும்.

விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும்.


மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஜூனில் வழங்கப்படும். EMIS மூலம் online TC வழங்கப்பட வேண்டும். 5 ,8 ம் வகுப்பு மாணவர்களை migrate செய்ய வேண்டும். கல்வி சேனல் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

பள்ளி திறக்கும் முதல்நாள் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். பள்ளி பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள்  TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு Diet மூலம் இலவச பயிற்சி வழங்கப்படும் TET தேர்வு ஜூன் 8 நடத்தப்படும்.

மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டை விட கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். சேர்க்கப்பட்ட மாணவர்களை EMIS-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும். 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.  EMIS-ல் பள்ளிக்கு தேவையான அனைத்து  பதிவேடுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயோமெட்ரிக் விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும் - பள்ளி கல்வித்துறை செயலர்  பயோமெட்ரிக்  விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும் - பள்ளி கல்வித்துறை செயலர் Reviewed by Rajarajan on 10.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை