தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் பிள்ளையார் சுழி போட்டுள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியலை விரைந்து தயாரித்து வெளியிட உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை விரைந்து தயாரித்து வெளியிட நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: உள்ளாட்சி தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகள் அமைக்க வேண்டும். அதன் விபரத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மாவட்ட, ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சி, தேர்தல் அலுவலர்கள் வெளியிட வேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்காக தமிழில் தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி, பெயர், வார்டு எண், பாகம் எண் போன்றவை இடம் பெற வேண்டும்.
அதேபோல் ஓட்டுச்சாவடி பெயர், ஓட்டுச்சாவடி எண், ஓட்டுச்சாவடி வகை இடம் பெற வேண்டும். வாக்காளர் பெயர், தந்தை அல்லது கணவன் பெயர், வீட்டு எண், வயது, பாலினம் போன்றவையும் இடம் பெற வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பு நடைமுறை எத்தனை நகல் அச்சிடப்பட வேண்டும் என்பது போன்ற விபரங்களும் அரசாணையில் விவரிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Reviewed by Rajarajan
on
12.5.19
Rating:
கருத்துகள் இல்லை