இடைத் தேர்தலை முன்னிட்டு TNPSC அருங்காட்சியக பொறுப்பாளர் தேர்வு மாற்றம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
அருங்காட்சியக பொறுப்பாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் 25-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
தமிழக அரசிற்கு உட்பட்ட அருங்காட்சியக பொறுப்பாளர் காலியிடங்களை நிரப்ப வரும் மே 19-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இந்நிலையில், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வரும் 19ம் தேதியன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டும், ஒரு சில நிர்வாகக் காரணங்களுக்காகவும் வரும் மே 19ம் தேதியன்று நடைபெறவிருந்த தேர்வு வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இடைத் தேர்தலை முன்னிட்டு TNPSC அருங்காட்சியக பொறுப்பாளர் தேர்வு மாற்றம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
Reviewed by Rajarajan
on
14.5.19
Rating:
Reviewed by Rajarajan
on
14.5.19
Rating:


கருத்துகள் இல்லை