அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு, அரசாணை எண் 151 தேதி:20.05.2019
தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டது.
தமிழக அரசு. அரசாணை எண் 151 தேதி 20.05.2019 படி 9% இருந்து 12% என்ற விகிதத்தில் 3% ஊதிய உயர்வு அறிவித்துள்ளது. இது இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நிலுவைத் தொகை வழங்கப்பட்டு இந்த மாதம் முதல் புதிய சம்பள விகிதத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வு பெறுவார்கள்.
மக்களவை பொதுத் தேர்தலின் காரணமாக மார்ச் மாதம் வெளியிடப்பட வேண்டிய அரசாணை ஆனது தேர்தல் நிறைவடைந்த மறுநாள் இன்று ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு, அரசாணை எண் 151 தேதி:20.05.2019
Reviewed by Rajarajan
on
20.5.19
Rating:
கருத்துகள் இல்லை