முதலாமாண்டு பொதுத் தேர்வெழுதி மாணவர்களின் விடைத்தாட்களின் நகல் இன்று கிடைக்கும்
மார்ச் 2019, மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் 21.05.2019 முற்பகல் முதல் என்ற http://scan.tndge.in/ இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில்
என்ற தலைப்பினை "Application for re total/ re valuation " ல் Click செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 23.05.2019 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கு, உயிரியலுக்கு, 305 ரூபாய்; மற்ற பாடங்களுக்கு, 205 ரூபாய்; மறுமதிப்பீடுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 505 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என,
முதலாமாண்டு பொதுத் தேர்வெழுதி மாணவர்களின் விடைத்தாட்களின் நகல் இன்று கிடைக்கும்
Reviewed by Rajarajan
on
21.5.19
Rating:
கருத்துகள் இல்லை