Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்த அறிவிப்பு ஏதும் அரசு வெளியிடவில்லை என பெற்றோர்கள் கவலை..?

அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், கல்வி கட்டணம் நிர்ணயிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், கல்வி கட்டண கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. 

இந்த கமிட்டி சார்பில், ஒவ்வொரு பள்ளிக்கும், கல்வி கட்டணம் நிர்ணயம் செய்கிறார்கள். இந்த ஆண்டிற்கான அரசு கமிட்டி நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு என்ற விபரத்தை, பள்ளி கல்வித்துறை வெளியிடவில்லை. 

பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்கள் எண்ணிக்கை, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கல்வி தகுதி போன்றவற்றின் அடிப்படையில், கல்வி கட்டணத்தை, கட்டண கமிட்டி நிர்ணயிக்கும்.  புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டிற்கான கல்விக் கட்டணம் தெரியாத நிலையில் பள்ளிகளில் கல்வி கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.




சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், பெற்றோரிடம் அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 

இந்த பட்டியலை வெளியிட்டால், பள்ளிகளில் அதிக கட்டணம் வாங்குவதை தடுக்க முடியும். அதற்குரிய நடவடிக்கை அரசு மேற்கொள்ள வேண்டும்  என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்த அறிவிப்பு ஏதும் அரசு வெளியிடவில்லை என பெற்றோர்கள் கவலை..? தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம் குறித்த அறிவிப்பு ஏதும் அரசு வெளியிடவில்லை என பெற்றோர்கள் கவலை..? Reviewed by Rajarajan on 18.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை